News April 16, 2024
திருச்சி: நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்

மருங்காபுரி அடுத்த பளுவஞ்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (26). இவர் இன்று நள்ளிரவு 1 மணியளவில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு அருகே நடந்து சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News December 11, 2025
திருச்சி: ஆசிரியர் தற்கொலை!

திருச்சி கிராப்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் சார்லஸ் (50). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தால், மனமுடைந்த சார்லஸ் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 11, 2025
திருச்சி: பஸ்சில் இருந்து கீழே விழுந்து சாவு

புள்ளம்பாடி அடுத்த ஆலம்பாக்கத்தை சேர்ந்தவர் விக்டர்ராஜ் (31). இவர் அரியலூர் அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விக்டர்ராஜ் வேலை முடிந்து அரியலூரில் இருந்து புள்ளம்பாடிக்கு அரசு பஸ்சில் வந்துகொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடி அருகே இறங்குவதற்காக படியில் நின்ற அவர் மீது டூவீலர் ஒன்று மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 11, 2025
திருச்சி: பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு “பசுமை சாம்பியன்” விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpcp.gov.in என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஜனவரி 20-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


