News November 6, 2025
திருச்சி: தொழில் நிறுவனத்தில் தீ விபத்து

மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை யில் உள்ள ஜமீல் என்ற இரும்பு உருக்கு ஆலை தனது கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை இரவு அங்கு பணியில் பயன்படுத்திக்கொண்டிருந்த சிசர் லிப்டிங் என்னும் இயந்திரம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Similar News
News November 6, 2025
திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 6, 2025
திருச்சி: நிதி நிறுவன மோசடி – இருவர் கைது

திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த எல்பின் என்ற தனியார் நிதி நிறுவனம் மீது பண மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த திருச்சியை சேர்ந்த பாபு, ஆனந்த் ஆகிய இருவர் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேற்று (நவ.5) கைது செய்யப்பட்டு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
News November 6, 2025
திருச்சி: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


