News March 29, 2024
திருச்சி : தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரி குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 3 லட்சத்து 45ஆயிரம் இருந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 8, 2025
திருச்சி: தபால் சேவை முக்கிய அப்டேட்

இந்திய அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வரும் செப்.,24-ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நேரிலோ அல்லது வலை செயலிகள் மூலமாகவோ பங்கேற்கலாம். தபால் மூலம் குறைகளை தெரிவிப்போர் தலைமை தபால் நிலைய அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்திற்கு தபால்களை அனுப்ப வேண்டும் என திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
திருச்சி: சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க கோரிக்கை

திருச்சி – தாம்பரம் இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 8 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளன. இதனால், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் கிடைக்காத பயணிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகவே இந்த சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டுமென ரயில் பயணிகள் சங்கத்தினர் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 8, 2025
திருச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி மக்களே இதற்கு விண்ணபிக்க <