News April 3, 2024

 திருச்சி: தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை?

image

திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார். புதுகை- திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் 100 % வாக்களிக்கும் வகையில் அன்றைய தினம் அனைத்து நிறுவனங்களும், தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Similar News

News February 4, 2026

குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

மணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் இவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, நேற்று ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News February 4, 2026

திருச்சி: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

image

திருச்சி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in என்ற<<>> இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News February 4, 2026

திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 8:40 மணிக்கு புறப்படும், திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் பிப்.4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில், பொறியியல் பணிகள் காரணமாக திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!