News December 27, 2025

திருச்சி: து.குடியரசு துணைத் தலைவர் வருகை – ஆட்சியர் தடை

image

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் டிச.29 ஆம் தேதி திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்கள் காரணமாக அன்றைய தினம் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 31, 2025

திருச்சி மக்களே.. நாளை இதை செய்ய மறக்காதீங்க!

image

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகா லட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

News December 31, 2025

திருச்சி வருகை தரும் மத்திய அமைச்சர் அமித்ஷா

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 4-ம் தேதி இரவு திருச்சி வருகைபுரிந்து, பின்னர் 5-ம் தேதி காலை ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் கோர்ட் யார்ட் ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, திருச்சியில் 1000 பெண்கள் கலந்து கொள்ளும் பொங்கல் விழாவில் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

News December 31, 2025

திருச்சி: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!