News April 14, 2024
திருச்சி: திமுக பிரமுகர்கள் கைது

திருச்சி இபி ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி , திமுக வார்டு செயலாளர் உட்பட மூன்று பேர் அங்கு திமுக கொடியையும் வேட்பாளரின் சின்னத்தையும் உரிய அனுமதி பெறாமல் கட்டிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், தேர்தல் நடத்தை விதி மீறல்களை, மீறியதாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News July 10, 2025
புதிய மோசடி: திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

நீங்கள் செய்யாத போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது போல உங்களது செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் குறுஞ்செய்திகளில் வரும் லிங்கை தொடுவதன் மூலம் உங்கள் வங்கி கணக்குகளில் உள்ள பணம் திருடப்படலாம். சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ அழைக்கலாம். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News July 10, 2025
கடலூர் ரயில் விபத்து: திருச்சியில் 11 பேர் ஆஜர்

கடலூர் அருகே செம்மங்குப்பம் நேற்று முன்தினம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக 13 பேருக்கு ரயில்வே நிர்வாகம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இன்று ரயில் லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித்குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன் உட்பட 11 பேர் இன்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
News July 10, 2025
திருச்சி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க