News February 28, 2026

திருச்சி: தாயுமானவர் திட்டம் குறித்த அறிவிப்பு

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், வரும் மார்ச்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடு தேடி வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது இல்லங்களிலேயே ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 28, 2026

துறையூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

திருச்சி மாவட்டம் துறையூர் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை தலைமையில், வரும் மார்.3ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய மின் இணைப்பு, மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்து பயனடையலாம் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 28, 2026

திருச்சி: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

திருச்சி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>https://pgportal.gov.in/ <<>>இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

திருச்சி: வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகை கொள்ளை

image

திருச்சி மாவட்டம் கல்லாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு, கடந்த பிப்.25ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கானக்கிய நல்லூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!