News March 3, 2026

திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சிகள் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியினை முழுமையாக முடித்த பிறகு தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 29, 2026

திருச்சி: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

image

திருச்சி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<>நம்ம சாலை<<>>’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க!

News March 29, 2026

திருச்சி: பி.எஸ்.என்.எல் சேவை குறித்த அறிவிப்பு

image

2025-26 நிதியாண்டின் நிறைவை முன்னிட்டு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக திருச்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வரும் 31-ம் தேதி முழுமையாக செயல்படும். தொலைபேசி கட்டணம் செலுத்துதல், புதிய இணைப்பு, இணைப்பு புதுப்பித்தல் ஆகிய சேவைகள் தடையின்றி வழங்கப்படும். இந்த வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

News March 29, 2026

திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

error: Content is protected !!