News October 8, 2025
திருச்சி: தலைகீழாக கவிழ்ந்த கார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து வையம்பட்டி அருகே உள்ள கல்பட்டியில் திண்டுக்கல் திருச்சி நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து. திருச்சியை சேர்ந்த ஐந்து பேர் சிறுசிறு காயங்களுடன் உயிர்தப்பினர். அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 7, 2025
நாளை திருச்சி வரும் துணை முதல்வர் !

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் நாளை (அக்.8) நடைபெற உள்ளது. இதில் இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார். இக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகள் அணைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News October 7, 2025
திருச்சி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 7, 2025
திருச்சி மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி பால்பண்ணை மேம்பாலத்தில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கனரக லாரி சாலையில் கவிழ்ந்ததில், அதிலிருந்த சுவற்றுக்கு பூசப்படும் சிமெண்ட் பட்டி மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தது. லாரி கவிழ்ந்ததால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் கிரேன் மூலம் வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.