News August 8, 2025

திருச்சி: தமிழ் செம்மல் விருது பெற அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் ஆர்வலர்கள் என்ற www.tamilvalarchithurai.com என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வரும் 26 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 26, 2026

திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு

image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள 122 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>nitt.edu<<>> என்ற தளத்தில் ஏப்.6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் “தி ரிஜிஸ்டர், என்.ஐ.டி, திருச்சி-15” என்ற முகவரிக்கு ஏப்.16-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

உள்நாட்டு பயணிகள் வருகை 52% அதிகரிப்பு!

image

திருச்சி விமான நிலையத்திலிருந்து இந்திய நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் நிகழாண்டில் இதுவரை 9,846 விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு 8,51,212 பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது கடந்த 2024-25 ஆம் ஆண்டை விட விமான சேவையில் 21 சதவீதமும், பயணிகள் வருகையில் 52 சதவீதமும் அதிகமாகும் என விமான நிலைய இயக்குனர் ராஜு தெரிவித்துள்ளார்.

News March 26, 2026

திருச்சி: விக்னேஷ் குடும்பத்திற்கு அமைச்சர் நேரில் ஆறுதல்

image

திருவெறும்பூர் தொகுதி மேல கல்கண்டார்கோட்டையை சேர்ந்த தவெக தொண்டரான கல்லூரி மாணவர் விக்னேஷ். இவர் விஜயை பார்க்கச் சென்றபோது விபத்தில்சிக்கி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்ததை அடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவரது வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

error: Content is protected !!