News November 22, 2025
திருச்சி: தப்பி ஓடிய கடத்தல் கும்பலுக்கு வலை வீச்சு

மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மணல் கடத்தல் கும்பல் போலீசாரை கண்டதும் வேனை நிறுத்தி விட்டு தப்பியோடியுள்ளனர். அதனை தொடர்ந்து வேனை கைப்பற்றிய போலீசார் பூமி பாலன், கிஷோர், பால சமுத்திரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
திருச்சி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

திருச்சி மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News January 26, 2026
திருச்சி அருகே விபத்து: தடுப்புச் சுவரில் மோதி விவசாயி பலி

துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மலையாளி (53) என்பவர் எதிர்பாராத விதமாக சாலைத் தடுப்பில் மோதி பலத்த காயமடைந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
திருச்சி: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய<


