News September 15, 2025
திருச்சி: தந்தையை தாக்கிய மகன் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கீழ பொய்கைப்பட்டியை சேர்ந்தவர் கோபால் (56). இவரது மகன் சிவா. இருவருக்குமிடையே கடந்த செப்.09 அன்று பண பரிவர்த்தனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவா தனது தந்தையை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மணப்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இதையடுத்து புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சிவா மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
Similar News
News September 15, 2025
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 15, 2025
திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியீடு

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என கழகத் தொண்டர்களை வழிநடத்தி, இந்தியாவிலேயே முதல் மாநில கட்சியாக திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர் அண்ணா. திராவிடத்தின் அணையா விளக்கு பேரறிஞர் அண்ணாவை போற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
அண்ணாவை கொண்டாடுவோம்: மகேஷ் பொய்யாமொழி அறிக்கை

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனது பேச்சால், எழுத்தால், பேரறிவால் இளைஞர்களை அணிதிரள வைத்து, திராவிடக் கொள்கைகளுக்கான ஜனநாயகப் படையைக் கட்டமைத்து மாநில உரிமைகளுக்காகப் போராட வைத்தவர்! இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராட வைத்தவர். இன்று வரையிலும் கொள்கை எதிரிகளால் வெல்ல முடியாத சட்டங்களை இயற்றியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவை கொண்டாடுவோம்’ என தெரிவித்துள்ளார்.