News October 27, 2025

திருச்சி: டூரிஸ்ட் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி

image

திருச்சி-கரூர் சாலையில் கடியாக்குறிச்சி வளைவு பகுதியில் இன்று அதிகாலை டூரிஸ்ட் பேருந்தும், கனரக லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் ரோந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News October 27, 2025

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 573 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, விதவை உதவித்தொகை, தெரு விளக்கு, தண்ணீர் இணைப்பு மனுக்கள், தொகுப்பு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மொத்தம் 573 மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

திருச்சி: மக்களே… இனி இது அவசியம்!

image

திருச்சி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு TN-ALERT என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News October 27, 2025

தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு – அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் திருச்சி மாவட்டத்தில் மா, கொய்யா மற்றும் இதர பழ பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை கவாத்து செய்வதன் மூலம், மரத்தின் சுமையை குறைத்து பாதுகாக்கலாம். சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை அடங்கல் மற்றும் இ-அடங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!