News February 16, 2026
திருச்சி: டிராக்டர் மோதி கல்லூரி மாணவி பலி

மண்ணச்சநல்லூர் அடுத்த அய்யம்பாளையம் தரகுகாரன்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நமீதா. இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை தனது தாயாருடன் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, நாடார்பள்ளம் பகுதியில் டிராக்டர் மோதியது. அதில் நமீதா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அவரது தாயாரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News February 17, 2026
திருச்சி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News February 17, 2026
துவாக்குடி: சர்வீஸ் சாலை குறித்த அறிவிப்பு

திருச்சி, பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14.5 கி.மீ நீளத்திற்கு, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சர்வீஸ் சாலை அமைக்கும் பணிக்காக 9 கிராமங்களில் நிலம் எடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும் 7 கிராமங்களில் நிலம் எடுப்பு பணி முடிக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 17, 2026
திருச்சி: வீட்டில் இருந்தே மாதம் 9,000 சம்பாதிக்கலாம்!

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!


