News August 12, 2025
திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி, பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி-யாக பொறுப்பு வகித்து வந்த வருண்குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW !
Similar News
News August 12, 2025
திருச்சி: சோழன் விரைவு ரயில் நேரம் மாற்றம்

திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் திருச்சி – சென்னை எழும்பூா் சோழன் விரைவு ரயில், வரும் 20-ஆம் தேதி மட்டும் பொறியியல் பணிகள் காரணமாக, சுமாா் 1.45 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 12:45 மணிக்குப் புறப்படும். மேலும் இந்த ரயில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 12, 2025
திருச்சி: B.E முடித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <
News August 12, 2025
திருச்சி: காவல் செயலி குறித்து விளக்கும் நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு “காவல் உதவி செயலி” குறித்து விளக்கும் நிகழ்ச்சி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வனிதா கலந்துகொண்டு, காவல் உதவி செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கி பேசினார். இதில் தபால் நிலைய அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.