News January 29, 2026

திருச்சி: டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு

image

வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் வரும் பிப். 1ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1/FL2/FL3/FL3A/FLFL3AA & FL11 ஆகிய ஹோட்டல் பற்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 6, 2026

திருச்சி: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில்<> mylpg என்று<<>> இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News February 6, 2026

திருச்சி – சென்னை கூடுதல் விமான சேவை அறிவிப்பு

image

திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு 6 விமான சேவைகளை வழங்கி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், நிர்வாக காரணங்களுக்காக விமான சேவைகளை இரண்டாக குறைத்தது. இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு சிறிய ரக விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறிய ரக விமானம் திருச்சியில் இருந்து பிற்பகல் 2:55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2026

திருச்சி: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ஜங்சன் ரயில் நிலையத்தில் தொடர் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரை இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இரண்டு தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!