News January 15, 2026
திருச்சி: ஜல்லிக்கட்டு போட்டி – ஐஜி எச்சரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்களும், காளையின் உரிமையாளர்களும் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
திருச்சி: கோளரங்கத்தில் திறனறித் தேர்வு

திருச்சி அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில், 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வானது வரும் ஜன.26-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 0431-2332190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட இயக்குனர் அகிலன் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
திருச்சி: கூட்டு பட்டா, பட்டாவில் சிக்கலா?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர் கூட்டு பட்டா, விற்பனை சான்றிதழ், நில வரைபடம், சொத்து வரி ரசீது, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன் தாலுகா அலுவலகம் (அ) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்யுங்க.
News January 18, 2026
திருச்சி மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல், நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் அளிக்களாம். இதற்கு செல்போனில் TN CM HELPLINE என்ற appஐ <


