News May 18, 2024
திருச்சி: செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு விசிட்

திருச்சிராப்பள்ளியில் உள்ள புராதான கட்டிடங்களை பார்வையிடுவதன் ஒரு பகுதியாக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் பழமையான கட்டிடங்களை நேற்று ஆட்சியர் பிரதீப் குமார் பார்வையிட்டார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட ஆட்சியர் அங்குள்ள பழமையான பொருட்கள் குறித்து பேராசிரியர்கள் இடம் கேட்டு அறிந்தார்.
Similar News
News September 5, 2025
திருச்சியில் இருந்து சென்னை ரயிலில் செல்கிறீர்களா?

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்த சோழன் விரைவு ரயில், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய சேது எக்ஸ்பிரஸ், போட் மெயில், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் வண்டிகள் வரும் பத்தாம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 5, 2025
திருச்சி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

திருச்சி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News September 5, 2025
திருச்சி: மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு 187 இடங்கள் காலியாக உள்ளன. காலி இடங்கள் தொடர்பான விவரங்களை www.kapvgmctry.ac.in என்ற தளத்தில் காணலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, வரும் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிக்குள் முதல்வர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.