News September 27, 2025

திருச்சி: சூரிய மின் திட்டம் தொடர்பான முகாம் அறிவிப்பு

image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், பிரதம மந்திரியின் சூரிய மின் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் வரும் 29ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சூரிய மின் தகடுகள் அமைக்க கடன் வழங்குவது தொடர்பாக வங்கி முகவர்கள் பங்கேற்கின்றனர். இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ள வேண்டுமென மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 1, 2026

திருச்சி: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

image

திருச்சியில் 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்பு
2. முசிறி வருவாய் கோட்டாட்சியர் அரமுத தேவசேனா விபத்தில் பலி
3. தவெக தலைவர் விஜய் பரப்புரை
4. சிறுகனூர் அருகே இளம்பெண் எரித்து கொலை
5. புத்தூர் பகுதியில் சிவாஜி சிலை திறப்பு
6. திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிக்கொலை
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.

News January 1, 2026

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 1, 2026

திருச்சி: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் <<>>App மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை (0431-2332447) அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க..

error: Content is protected !!