News November 7, 2025
திருச்சி: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 7, 2025
திருச்சி: ட்ரோன்கள் பறக்க தடை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 9 ஆம் தேதி இரவு திருச்சி வருகை தர உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி 09.11.2025 முதல் 10.11.2025 நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
திருச்சி மாவட்டத்திற்கு 2-ஆம் இடம்!

திருச்சி மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 29,688 மாணவர்களில் 18,882 மாணவர்கள் அடிப்படை கற்றல் அடைவு தேர்வில் தேர்ச்சி (63%) பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தையும், திருச்சி மாவட்டம் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளது. தேர்ச்சி பெறாத 10,882 மாணவர்களுக்கு மீண்டும் 6 வாரங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
News November 7, 2025
திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின்

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற நவ.9-ம் தேதி திருச்சி வருகை தர உள்ளார். அதைத் தொடர்ந்து மறுநாள் 10-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இந்த திருமண நிகழ்ச்சி திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் நடைபெற உள்ளது.


