News August 9, 2025

திருச்சி: சுகாதாரத் துறையில் வேலை

image

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், மாவட்டத்தில் காலியாக உள்ள 143 செவிலியர், 11 ஆய்வக நுட்புநர், 5 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் ஆக.,21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க..

Similar News

News December 11, 2025

திருச்சி: பஸ்சில் இருந்து கீழே விழுந்து சாவு

image

புள்ளம்பாடி அடுத்த ஆலம்பாக்கத்தை சேர்ந்தவர் விக்டர்ராஜ் (31). இவர் அரியலூர் அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விக்டர்ராஜ் வேலை முடிந்து அரியலூரில் இருந்து புள்ளம்பாடிக்கு அரசு பஸ்சில் வந்துகொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடி அருகே இறங்குவதற்காக படியில் நின்ற அவர் மீது டூவீலர் ஒன்று மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News December 11, 2025

திருச்சி: பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு “பசுமை சாம்பியன்” விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpcp.gov.in என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஜனவரி 20-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

திருச்சி: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

திருச்சி மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!