News September 8, 2025
திருச்சி: சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க கோரிக்கை

திருச்சி – தாம்பரம் இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 8 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளன. இதனால், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் கிடைக்காத பயணிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகவே இந்த சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டுமென ரயில் பயணிகள் சங்கத்தினர் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 9, 2025
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு

திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் கடந்த செப்.,6-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News September 9, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 426 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு கோரிக்கை, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட 426 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
திருச்சி: தபால் சேவை முக்கிய அப்டேட்

இந்திய அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வரும் செப்.,24-ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நேரிலோ அல்லது வலை செயலிகள் மூலமாகவோ பங்கேற்கலாம். தபால் மூலம் குறைகளை தெரிவிப்போர் தலைமை தபால் நிலைய அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்திற்கு தபால்களை அனுப்ப வேண்டும் என திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.