News April 4, 2025

திருச்சி: கோவில் குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு

image

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான ராமா் தீா்த்தக் குளத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குளத்தின் முள்புதரில் கற்சிலை ஒன்றின் தலைப்பகுதி மட்டும் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!

Similar News

News April 5, 2025

பெண்களுக்கான இலவச எலக்ட்ரிக் ஆட்டோ பயிற்சி

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. கல்வி தகுதி: 8ம் வகுப்பு, வயது: 18 முதல் 40வயது வரை உள்ள பெண்கள். மாதம் பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை வருமானத்தில், 100% வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க, வரும் 16/04/25 தேதி கடைசி நாள். தொடர்புக்கு: 8903363396

News April 5, 2025

திருச்சியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் ஆஃபீசர் (Sales Officer) பணிக்கான 50 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. +2 முடித்த தகுதியுடையவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 4, 2025

சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. அக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல்.15ஆம் தேதி காலை 10:31 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் நடைபெற உள்ளது. அச்சமயம் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்மன் அருள் பெற அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!