News January 25, 2026

திருச்சி: கொலை வழக்கில் நான்கு பேர் கைது

image

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர், கடந்த 19ஆம் தேதி வீட்டில் உறங்கிய நிலையில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை புத்தாநத்தம் காவல் துறையினர், இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். துரிதமாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்பி பாராட்டினார்.

Similar News

News April 3, 2026

திருச்சி: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எம்பி

image

திமுக ராஜ்ய சபா எம்பி திருச்சி ராஜாத்தி சல்மா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை டெல்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் மங்களூர் முதல் நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்கள் வரை, திண்டுக்கல், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, முத்துப்பேட்டை வழியாக புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 3, 2026

திருச்சி: கட்டிட தொழிலாளர் சங்கம் திமுகவிற்கு ஆதரவு!

image

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அவரது அலுவலகத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்கத்தினர், நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்வில், சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

News April 3, 2026

திருச்சி: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

தமிழகத்தில் கோடை காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சியில் எந்த பகுதியில் இருந்தாலும், ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிட்டத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

error: Content is protected !!