News January 26, 2026

திருச்சி: கொலை வழக்கில் சிறுமி உட்பட 4 பேர் கைது

image

புத்தாநத்தம் அடுத்த காவல்காரன்பட்டியைச் சேர்ந்து சிவசுப்பிரமணியன் என்பவர் கடந்த 20ம் தேதி அன்று வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (22), சேரன்(20), சிவநேசசெல்வன் (19), 16 வயது சிறுமி உள்ளிட்டோரை போலீசார் நேற்று கைது செய்தனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடைபெற்ற கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 1, 2026

திருச்சி: பொதுமக்கள் நடமாட தடை – ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் பிப்.2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை, துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும், பொதுமக்கள் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஈடுபடுத்தவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 1, 2026

திருச்சி: வாக்காளர் பட்டியல் குறித்த அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் கடந்த 19.12.25 முதல் 30.01.26 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், மொத்தம் 1,37,308 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் பரிசீலனை செய்து, வரும் 10-ம் தேதிக்குள் இறுதி முடிவு செய்வார்கள். பின்னர் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 1, 2026

திருச்சி: டிகிரி போதும்-அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!