News December 23, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 624 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு வகையான உதவித்தொகை மனுக்கள், தெரு விளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள் என 624 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 1, 2026
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News January 1, 2026
திருச்சி: சோலார் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <
News January 1, 2026
திருச்சி: தேள் கடித்து சிறுவன் பலி

கீழப்பட்டியை சேர்ந்தவர் சர்வந்த் (8). 3-ம் வகுப்பு படித்து வந்த சர்வந்த் விளையாடிக் கொண்டிருந்தபோது தேள் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து சிறுவனை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


