News March 31, 2026
திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்ய விஜய் தயார்!

2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய் நேற்று பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். இதனையடுத்து அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் நாளை மறுநாள் பிரசாரம் செய்ய ECI-யிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. காலையில் மனுதாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். பெரம்பூரில் அவருக்கு சரியான போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
Similar News
News April 8, 2026
தமிழக தேர்தல்: ₹462 கோடி பறிமுதல்

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுமுதல் நேற்றுவரை ₹462.74 கோடி மதிப்பு பணம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. ₹92.07 கோடி ரொக்கப் பணம், ₹2.04 கோடி மதிப்புள்ள மதுபானம், ₹75.76 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், ₹214.38 கோடி தங்கம் & வெள்ளி, ₹78.49 கோடி மதிப்புள்ள இலவச பரிசு பொருள்களை பறக்கும்படை பறிமுதல் செய்துள்ளது.
News April 8, 2026
இனி 4 ஆண்டு B.Sc, B.Ed படிப்பு கிடையாது

பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சியும் இணைந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) வழங்கிவந்தது. இப்படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக TNTEU அறிவித்துள்ளது. மேலும், கல்வியியல் கல்லூரிகள் இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் எந்த விதத்திலும் TNTEU பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 8, 2026
இவர்களிடம் இருந்து விலகி இருங்க: ரஜினி அட்வைஸ்

நடிகர்களின் வாகனத்தை பின் தொடராமல் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மறைமுகமாக விஜய் ரசிகர்களை ரஜினி அறிவுரை கூறியுள்ளார். படிக்கிற நேரத்தில் படிக்க வேண்டும்; அதை விட்டுவிட்டால் ரொம்ப கஷ்டப்படுவீர்கள் எனக்கூறிய அவர், மது, கஞ்சா போன்றவற்றை இளைஞர்கள் தொடவே கூடாது என்றார். மேலும், போதைப் பழக்கத்தோடு நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தினார்.


