News May 7, 2025
திருச்சி: கால்நடைகள் மூலம் ரூ.23 லட்சம் வருவாய்

திருச்சி மாநகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 முதல் 28.04.2025 வரை 767 கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.19,88,500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 51 கால்நடைகள் ஏலம் விடப்பட்டதன் மூலம் ரூ.3.45 லட்சம் கிடைத்துள்ளது. மொத்தத்தில் மாநகராட்சிக்கு ரூ.23,33,500 வருவாய் கிடைத்துள்ளது.
Similar News
News August 19, 2025
திருச்சி: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள்<
News August 19, 2025
திருச்சி: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!
News August 19, 2025
திருச்சி – காரைக்கால் ரயில் ரத்து

திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.