News October 8, 2025
திருச்சி: கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கல்பட்டியில் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் நேற்று கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக காரில் பயணித்த 5 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 8, 2025
திருச்சி: வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு

திருச்சி பொன்மலை ரயில் நிலையம் வழியாக கடந்த 27ஆம் தேதி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தாக்குதலில் ஈடுபட்டது திருச்சியை சேர்ந்த தேன்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் தேன்ராஜை நேற்று கைது செய்தனர்.
News October 8, 2025
திருச்சி: தலைகீழாக கவிழ்ந்த கார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து வையம்பட்டி அருகே உள்ள கல்பட்டியில் திண்டுக்கல் திருச்சி நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து. திருச்சியை சேர்ந்த ஐந்து பேர் சிறுசிறு காயங்களுடன் உயிர்தப்பினர். அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 7, 2025
நாளை திருச்சி வரும் துணை முதல்வர் !

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் நாளை (அக்.8) நடைபெற உள்ளது. இதில் இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார். இக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகள் அணைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.