News September 15, 2025
திருச்சி: கார்கள் நேருக்கு நேர் மோதல் – 6 பேர் படுகாயம்

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுகமணி பேரூராட்சி அலுவலகம் அருகே, இன்று காலை 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்து குளித்தலை மற்றும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த வசந்தா என்பவர் மீது கார் மோதியதில், அவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News September 15, 2025
திருச்சி: மத்திய அரசு பணியாளர் தேர்வில் 511 பேர் ஆப்சென்ட்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேசிய பாதுகாப்பு சேவை தேர்வு, திருச்சியில் இரண்டு மையங்களில் நேற்று (செப்.14) நடைபெற்றது. இத்தேர்வு எழுத இரண்டு மையங்களிலும் சேர்த்து 1274 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 763 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதி 511 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
திருச்சி மாவட்டத்திற்கு பெருமை!

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் விளையாடி வந்த திருச்சியை சேர்ந்த ஹேம்சுதேசன் என்பவர் அகில இந்திய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் தமிழக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ள ரஞ்சி கோப்பை அணியில் ஹேம்சுதேசன் இடம் பிடித்துள்ளார். இதையடுத்து திருச்சியை சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர்கள், ரஞ்சி அணியில் இடம் பிடித்துள்ள ஹேம் சுதேசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
News September 15, 2025
திருச்சி: திருமணம் நடக்க சிறப்பு வழிபாடு

லால்குடி அருகே அரியூரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மாலையுடன் சென்று, இத்திருக்கல்யாண நிகழ்வில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். எனவே பக்தர்கள் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE!