News March 7, 2026

திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

image

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது, வரும் மார்ச்.13, 15 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 27, 2026

திருச்சி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

திருச்சி மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் செய்து<<>> புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News March 27, 2026

திருச்சியில் ரூ.44 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் வாகன சோதனை மூலம் 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டியதைத் தொடர்ந்து 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

News March 27, 2026

திருச்சி: பைக்கில் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தைச் சேர்ந்தவர் செல்வம் (34). சம்பவத்தன்று திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது தவறி விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!