News August 23, 2025
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் 2 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து நாகூர் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2026
திருச்சி: கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

திருச்சி கண்டோன்மெண்ட் செயின்ட் பால் செமினரி குடியிருப்பை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் தீபன் (24) பாரதிதாசன் பல்கலை.,யில் படித்து வந்தார். இந்நிலையில், தீபன் கருமண்டபம் பொன்னகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்கு எதிரே திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அவரது நண்பர், தீபனை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 9, 2026
திருச்சி: தேர்தல் விதிமீறல் புகார் எண்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டபேரவை தொகுதியில் காவல் துறையினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 8939146100, 100, 0431-2333629 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.