News January 22, 2026
திருச்சி: கழிவுநீரில் சடலமாக கிடந்த ஆண்

மணப்பாறை அடுத்த விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார். கூலித்தொழிலாளியான இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று முந்தினம் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
திருச்சி: வீடு தேடி வரும் ரேசன் பொருள் – ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வரும் பிப்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடு தேடி வந்து விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த 2 தினங்களில் பயனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
திருச்சி: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை – அதிரடி தீர்ப்பு

காட்டுப்புத்தூர் பகுதியில் கடந்த 202-ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(29) என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளி சசிகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.