News April 28, 2024

திருச்சி கல்லூரி மாணவன் தற்கொலை.

image

திருச்சி தென்னூர் மனோகரன், தீபா இவர்களது மகன் சாருகேஷ் (19) திருச்சி கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார் .தன் நண்பர்கள் பலரும் வேலையில் பிளேசாகி விட்டார்கள். நாம் மட்டும் இன்னும் பிளேஸ் ஆகவில்லையே என்ற மன அழுத்தத்தில் இருந்து வந்த சாருகேஷ் ,நேற்று வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 5, 2025

திருச்சி: ஒரே ஆண்டில் 245 பேர் மரணம்!

image

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 1,806 சாலை விபத்துகளில் 555 பேர் பலியாகினர். அதுபோல 2024-ம் ஆண்டில் நடைபெற்ற 1,922 சாலை விபத்துகளில் 633 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த 763 விபத்துகளில் 245 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. SHARE !

News August 5, 2025

கரூர் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும்

image

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்துகளை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிகமாக இயக்கலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் துவக்கிய நாள் முதல் அனைத்து பேருந்துகளும் பஞ்சப்பூர் சென்ற நிலையில் கரூர் செல்லும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கின. இதுதொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

News August 5, 2025

தூய்மை நகரங்களில் தொடர்ந்து பின்தங்கும் திருச்சி

image

மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சில நாட்களுக்கு முன் 2024-25ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்கள் பிரிவில் பங்கேற்ற 95 நகரங்களில் திருச்சி 49-வது இடத்தை பிடித்துள்ளது. திருச்சி நகரம் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 8,239. ஆனால் தமிழகத்தில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சி முதலிடத்தில்தான் உள்ளது.

error: Content is protected !!