News December 11, 2025
திருச்சி கலெக்டர் சரவணன் அறிவிப்பு

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது தமிழக முதலமைச்சரால் “கபீர் புரஸ்கார்” விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை http://awards.tn.gov.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
திருச்சி: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News December 12, 2025
திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே<
News December 12, 2025
திருச்சி: ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புத்தாநந்தம் ஊராட்சி புத்தாநத்தம்-9, இடையப்பட்டி-12 எனவும், கண்ணுடையான்பட்டி ஊராட்சி, கண்ணுடையான்பட்டி-12, முத்தபுடையான்பட்டி-12 எனவும், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி கிருஷ்ணசமுத்திரம்-7, செம்மங்குளம்-1 எனவும், இனாம் குளத்தூர் ஊராட்சி ஆலம்பட்டி புதுார்-9, இனாம்குளத்துார்-2 எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.


