News November 6, 2025
திருச்சி: கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கான கல்வி நிதியை மத்திய அரசு கடந்த அக்டோபரில் விடுவித்ததை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் 274 பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1930 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News November 6, 2025
திருச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

திருச்சி மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
திருச்சி: மீன்வளத்துறை ஒப்பந்தப்புள்ளி – ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம், கண்ணூத்து ஓடை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை குத்தகைக்கு விடுவதற்கான மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் வரும் நவ.10ம் தேதி காலை 11 மணி அளவில் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து இணையவழி மூலம் திறக்கப்படும். விருப்பமுள்ளோர் விண்ணப்பங்களை <
News November 6, 2025
சொகுசு கார் மோதி ஒருவர் பலி – போலீசார் விசாரணை

வையம்பட்டி அடுத்த புதுவாடி புதூரைச் சேர்ந்த கருப்பையா அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக திருச்சி To திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சொகுசு கார் மோதியதில், கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.


