News January 25, 2026

திருச்சி: ஒரே ஆண்டில் 849 வழக்குகள்

image

திருச்சி ரயில்வே காவல் நிலையம் பிச்சாண்டார்கோவில், மணப்பாறை, குமாரமங்கலம், சோழகம்பட்டி ஆகிய ரயில் நிலையங்களை எல்லைகளாக கொண்டு இயங்கி வருகிறது. இக்காவல் நிலையத்தில் கடந்த 2025-ம் ஆண்டு நகை திருட்டு வழக்கு, வழிப்பறி, கைபேசி திருட்டு வழக்குகள் என மொத்தம் 849 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர் கண்காணிப்பின் காரணமாக குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 25, 2026

த.வெ.க வில் இணைந்த முன்னாள் அமைச்சர்

image

திருச்சி வயலூர் சாலையை பூர்வீகமாக கொண்டவரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழிகாட்டுதல்படி வலம் வந்தவரும், அதிமுக அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றிய கு.ப. கிருஷ்ணன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்துவந்த இவர் இன்று தமிழக தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

News January 25, 2026

திருச்சி டிஎஸ்பிக்கு விருது: சமூக ஆர்வலர்கள் பாராட்டு

image

2026, குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்டு காவல்துறை பிரிவில் “தகைசால் பணிக்கான விருது” தமிழக காவல்துறை சேர்ந்த 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு காவல்துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News January 25, 2026

திருச்சி: 12th போதும்..அரசு வேலை!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!