News November 25, 2025
திருச்சி: ஐ.டி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

சோமரசம்பேட்டையை அடுத்த கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் டேனியல் ஸ்டீபன் (32). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்த இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். டேனியல் ஸ்டீபன் கடந்த சில நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News March 27, 2026
திருச்சி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

திருச்சி மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News March 27, 2026
திருச்சியில் ரூ.44 லட்சம் பறிமுதல்

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் வாகன சோதனை மூலம் 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டியதைத் தொடர்ந்து 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
News March 27, 2026
திருச்சி: பைக்கில் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தைச் சேர்ந்தவர் செல்வம் (34). சம்பவத்தன்று திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது தவறி விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


