News June 14, 2024
திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய வெளிநாட்டு கரன்சிகள்

திருச்சி விமான நிலையத்தில் இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியிடம் சோதனை செய்யும் போது ரூ.16,75,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
திருச்சி: வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் 40 வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்களாக (ஆர்.டி.ஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தாசில்தார் சத்தியபாமா தஞ்சை ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தாசில்தார் மணிகண்டன் தஞ்சை மாநகராட்சி மண்டலம்-1 உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
News March 8, 2026
திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நாளை (மார்ச்.9) திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திண்டுக்கல், மதுரை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர் புறவழிச்சாலை வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும் என மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
திருச்சி: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


