News January 14, 2026
திருச்சி: எஸ்.பி தலைமையில் குற்றத்தடுப்பு கூட்டம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தலைமையில் நேற்று (ஜன.13) மாதாந்தர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பங்கேற்று குற்ற வழக்கின் நிலுவை தன்மைகள் மற்றும் நிலைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் எஸ்.பி காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.
Similar News
News January 30, 2026
திருச்சி: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை – அதிரடி தீர்ப்பு

காட்டுப்புத்தூர் பகுதியில் கடந்த 202-ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(29) என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளி சசிகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி: காவல்துறை முக்கிய அறிவிப்பு

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சைபர் குற்றவாளிகளிடம் சிக்க வேண்டாம் எனவும், தெரியாத எண்களிலிருந்து வரும் லிங்கை தொட்டு உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க வேண்டாம். சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரினை பதிவு செய்ய கூறியுள்ளது.