News December 18, 2025
திருச்சி: எஸ்.பியின் அதிரடி நடவடிக்கை

முசிறி பகுதியில் சரவணன் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிவராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல, லால்குடியில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விக்னேஸ்வரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த இருவர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க நேற்று திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
திருச்சி அருகே இளம்பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த சரளப்பட்டியைச் சேர்ந்தவர் திலகவதி. இவருக்கும் அவரது கணவர் பிரபாகரனுக்கும் இடையே விவாகரத்து வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு 3 நாட்களில் வழங்கப்பட இருந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான திலகவதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி: குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு அற்புத வாய்ப்பு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 22-ம் தேதி காலை 10 – 1.30 வரை நடைபெற உள்ளது. முழு பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.100 பரிசாக வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க வழிமுறை தெரிவிக்கப்படும்.