News March 25, 2025
திருச்சி எம்பி காவல்துறைக்கு கோரிக்கை

மன்னார்புரம் அருகே நேற்று பாஜக சார்பில் நடந்த பொது கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கலைந்து சென்றதை தனியார் பத்திரிக்கையின் புகைப்பட கலைஞர் படம் பிடித்ததால் அவரையும், தொலைக்காட்சி ஒன்றின் நிருபரையும் அங்கிருந்த பாஜகவினர் தாக்கினர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட பாஜக.வினர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எம்பி துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News October 16, 2025
திருச்சி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம், மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் அக்.,18-ம் தேதி காலை 11 மணியளவில், மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
திருச்சி: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி: Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 15, 2025
திருச்சி: தடுப்பு சுவரில் டூவீலர் மோதி பலி

திருச்சி மாவட்டம், பி.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (58). இவர் நேற்று துறையூரில் உள்ள தனது மகன் பிரபுவை பார்ப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார். அப்போது ஆத்தூர் ரவுண்டானா அருகே சென்றபோது, அவரது டூவீலர் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.