News October 23, 2024

திருச்சி என்ஐடியில் மீண்டும் பரபரப்பு

image

திருச்சி என்ஐடி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் 4ஆம் ஆண்டு பி.டெக் படிக்கும் சென்னையைச் சேர்ந்த நித்தியசெல்வம் என்ற மாணவன் தொண்டை வலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் வாய் கொப்பளிக்கும் மருந்தை குடித்ததால், அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தவறுதலாக மருந்தை குடித்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News April 29, 2025

திருச்சி: பெண்களுக்கான இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி

image

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. குறைந்தது 8-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-40 வயதுடைய பெண்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதன் மூலம் மாதம் ரூ.15,000 வருமான கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 02/05/25 ஆகும். தொடர்புக்கு: 8903363396.

News April 29, 2025

திருச்சி: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

திருச்சி மாவட்ட மக்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்: திருச்சி எஸ்.பி- 0431-2333603, திருச்சி போலீஸ் கமிஷனர்- 0431-2332566, முசிறி டி.எஸ்.பி- 9498162695, மணப்பாறை டி.எஸ்.பி – 9443659745, லால்குடி டி.எஸ்.பி – 9498160648, திருவெறும்பூர் டி.எஸ்.பி- 9866246303, மாவட்ட குற்றப் பிரிவு- 9498178817, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு- 9498167714. மறக்காம SHARE செய்யவும்

News April 29, 2025

சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை அறிவுரை

image

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்க கூறியுள்ளது.

error: Content is protected !!