News August 21, 2025

திருச்சி: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, டி.என்.சி, பி.சி, பி.சி.எம் ஆகிய வகுப்புகளை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து www.drbtry.in என்ற தளத்தில் வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 4, 2026

திருச்சி: என்ஐடி-யில் வேலை வாய்ப்பு

image

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) ஒரு மருந்தாளுநர் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “தி ரெஜிஸ்டர், தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சி – 620015” என்ற முகவரிக்கு வரும் 14-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 4, 2026

திருச்சி: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

image

திருச்சி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 4, 2026

குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

மணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் இவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, நேற்று ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!