News December 16, 2025
திருச்சி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 17, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்!

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.18) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால் மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, கங்கைகாவேரி, அய்யம்பாளையம், மாதவன் சாலை, கவி பாரதி நகர், தேவராய நகர், ஓலையூர், மாம்பழச்சாலை, உத்தமர்சீலி, சென்னை பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 17, 2025
திருச்சி: சிறுமி பாலியல் வன்கொடுமை – கோர்ட் அதிரடி

மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில், கடந்த 2021-ம் ஆண்டு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை, சுரேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிடவே, அவரது தலையில் கல்லால் அடித்துவிட்டு தப்பி ஓடிய சுரேஷை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளி சுரேஷுக்கு நேற்று 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News December 17, 2025
திருச்சி அருகே சிக்கிய திருட்டு கும்பல்

முசிறி உழவர் சந்தை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த ராஜா (42), சுரேஷ் (42), சுப்ரமணி (48) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முசிறியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர்.


