News January 10, 2026
திருச்சி: இளைஞர் விளையாட்டு திருவிழா அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் – 2026” ஒன்றிய அளவிலான போட்டிகள் வரும் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 30ஆம் தேதி முதல் பிப்.1ஆம் தேதி வரையிலும் திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் வரும் 21 ஆம் தேதிக்குள் https://sdat.tn.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
திருச்சி: வீடு தேடி வரும் ரேசன் பொருள் – ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வரும் பிப்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடு தேடி வந்து விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த 2 தினங்களில் பயனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
திருச்சி: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை – அதிரடி தீர்ப்பு

காட்டுப்புத்தூர் பகுதியில் கடந்த 202-ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(29) என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளி சசிகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.