News May 10, 2024
திருச்சி: இளம்பெண்ணிடம் ஆசைகாட்டி பணம் மோசடி

திருச்சி மேலப்புதூர் சேர்ந்த சிந்தியா(30). இவர் வலைதளத்தில் பெயர் முகவரியை பதிவு செய்து பணம் செலுத்தினால் ஒரே நாளில் வட்டியுடன் பணம் வரும் என வந்த விளம்பரத்தை நம்பி ரூ.20000 முதலீடு செய்தார். மறுநாள் ரூ.25000 அக்கவுண்ட்டில் வந்தது.மகிழ்ச்சியடைந்த சிந்தியா மீண்டும் பல்வேறு தவணைகளில் ரூ.6,56000 வரை செலுத்தினர். பணம் திரும்பி வராததால் சிந்தியா நேற்று மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
Similar News
News May 7, 2025
திருவாரூர்: எடுத்த காரியத்தில் வெற்றியடையவில்லையா

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். Share It
News May 7, 2025
சாலையை கடந்த புள்ளிமான் பலி

துவரங்குறிச்சி அடுத்த சொரியம்பட்டி அருகே நேற்று இரவு திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மீது சாலையை கடக்க முயன்ற ஆண் புள்ளிமான் எதிர்பாராத விதமாக மோதியதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. துவரங்குறிச்சி வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் சாலையை கடக்கும் வனவிலங்குகள் உயிரிழப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.
News May 7, 2025
திருச்சி: அரசு அலுவலங்களுக்கு இனி அலைய வேண்டாம்

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதியினருக்கும் Share செயவும்.