News January 25, 2026
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
Similar News
News January 28, 2026
திருச்சி: விபத்தில் கல்லூரி மாணவி பலி

திருச்சியில் இருந்து முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது, கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சாலினி (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மாணவர் திருச்சி GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநரை கைது செய்தனர்.
News January 28, 2026
திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் நீதிமன்ற வளாகம், வையம்பட்டி, குணசீலம், வேங்கமண்டலம், நடுப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.29) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9:45 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 28, 2026
திருச்சி: 131 கம்பெனிகள் மீது நடவடிக்கை

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 178 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 131 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.


