News January 7, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 17, 2026

திருச்சி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 17, 2026

திருச்சி: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

image

சோமரசம்பேட்டை அடுத்த தேனாச்சிகாட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (24). இவரது மனைவி பிரபாவதி (21). இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டில் பொங்கல் வைப்பது தொடர்பாக கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் கோவிந்தராஜ் தனது மனைவியை கடுமையாக திட்டியதில் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!