News March 18, 2024
திருச்சி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு.!

திருச்சி ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்(ம)85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு அஞ்சல் வழியில் வாக்களித்திட  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே,
இந்தவாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி வழியாக மதுரை – ஓகா இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் இருந்து வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சி வழியாக குஜராத் மாநிலம் ஓகாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, புறப்பட்ட நாளில் இருந்து 3 வது நாள் ஓகா சென்றடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
திருச்சி: முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா ?

உங்களது 10th, 12th  மார்க் சீட் அல்லது சாதி சான்றிதழ் உள்ளிட்டவை காணாமல் / கிழிந்துவிட்டால் கவலை பட வேண்டாம். <
News November 4, 2025
திருச்சி: கார் மோதி பரிதாப பலி

காணகிளியநல்லூர் அடுத்த குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). கார் டிரைவரான இவர் நேற்று முன்தினம் தச்சன்குறிச்சியிலிருந்து குமுளூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த கார் ராஜேந்திரன் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட.நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார்.


